hit 3 review in tamil நானி நடித்துள்ள ‘ஹிட் 3’ படம் திரைவிமர்சனம்
hit 3 review in tamil நானி நடித்துள்ள ‘ஹிட் 3’ படம் திரைவிமர்சனம் hit 3 review in tamil

நடிகர்கள்:-
ஸ்ரீநிதி , கோமளி பிரசாத் , பிரதீக் பாபர், சமுத்திரக்கனி, சூர்யா சீனிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், அமித் சர்மா, அதிவி சேஷ் கார்த்தி மற்றும் பலர் நடித்துள்ளார்கள்
இயக்கம்:- சைலேஷ் கோலானு
கதை:-
விசாகப்பட்டினத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரியும் அர்ஜுன் சர்கார் (நானி) ஒரு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் விசாரணை கைதியாக இருக்கிறார்.
சிறையில் உள்ள மற்றொரு கைதி இந்த சிறையில் உள்ள பலரையும் நீதான் இந்த சிறையில் அடைத்துள்ளாய் ஆனா இப்ப நீயே சிறையில் உள்ளாய் என கூற அந்த கைதியிடம் தான் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணத்தை சொல்கிறார்.

அர்ஜுன் சர்கார் (நானி), விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஸ்ட்ரிட்டான போலீஸ் அதிகாரி. இவர் HIT என்கிற Homicide Intervention Team என்கிற குற்றவாளிகளைத் தண்டிக்கும் சிறப்பு புலனாய்வுப் படையிலும் இருக்கிறார். ஆந்திராவில் போலீஸ் சூப்பிரண்டான இருக்கும் நானி அவர்களைத் தலைகீழாகத் தொங்கவிட்டு, தலையைத் துண்டித்து கொல்கிறார். பின்னர் ஒன்றுமே தெரியாதது போல அந்த கொலை வழக்கை விசாரிக்கிறார். மீண்டும் ஒரு கொலையை அவர் செய்யும்போது, மற்றொரு பெண் போலீஸ் அதிகாரி கோமளி பிரசாத் அதை பார்த்துவிடுகின்றார்.
அப்போது அவரிடம் தான் ஏன் இவர்களை கொன்றென் என பிளாஷ்பேக் கதை ஆரம்பமாகின்றது ஜம்மு காஷ்மீரில் காவல்துறை புலனாய்வு அதிகாரியாகப் பணிபுரியும் ஹீரோ நானி, கொலைக் குற்றத்தைக் கண்டுபிடிக்கும் பணியில் அமர்த்தப்படுகிறார். விசாரனையில் காஷ்மீரில் நடந்த கொலையை போல் இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் கொலைகள் நடக்கின்றன.
இந்த கொலைகள் எதற்காக நடக்கிறது, அதற்கு யார் காரணம் என்பதை கண்டுபிடிக்க தனது புலன் விசாரணையை தொடங்குகிறார். விசாரணையில் திடுக்கிடும் மர்மங்கள் வெளியாகின்றன. ஒரே பாணியில் இந்தியா முழுவதும் வெவ்வேறு மாநிலங்களில் பலர் கொல்லப்பட்டதும் தெரிய வருகிறது.அங்கிருந்து டார்க் வெப் என்கிற இருண்ட வலைப்பின்னல்களுக்குப் பின்னால் ஒரு குற்றக் கும்பல் இருப்பது தெரிகிறது.
அந்த கும்பல் அப்பாவி மக்களைக் கொலை செய்வதற்கான காரணம் என்ன?
கொலையாளி யார்?
மிகப்பெரிய நெட்வொர்க்காக செயல்படும் அவர்களை நானி எப்படி கண்டுபிடித்தார்?
போலீஸ் அதிகாரியாக இருக்கும் நானி கொடூரமாக கொலைகளை செய்வது ஏன்?
இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? முடிவில் என்ன ஆனது? என்பதே பரபரப்பான மீதி கதை
மேலும் கிளைமாக்சில் 4ம் பாகத்திற்கான லீட் கொடுத்து அதில் தமிழ் நடிகர் கார்த்தியை காட்டி இருப்பது ஆடியன்ஸ்க்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ்.