sports News

IPL 2025 UPDATED SCHEDULE ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடக்கம் புதிய அட்டவணை முழு விவரம்

IPL 2025 UPDATED SCHEDULE ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடக்கம் புதிய அட்டவணை முழு விவரம்

IPL 2025 UPDATED SCHEDULE
IPL 2025 UPDATED SCHEDULE

ஐபிஎல் 2025 போட்டிகளுக்கான திருத்தப்பட்ட அட்டவணையின்படி, மீண்டும் வரும் 17ம் தேதி முதல் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தணிந்ததை அடுத்து, நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் காரணமாக கைவிடப்பட்ட பஞ்சாப் மற்றும் டெல்லி இடையேயான போட்டி மீண்டும் நடத்தப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டன. மீதமுள்ள 7 அணிகளும் பிளே-ஆஃப் சுற்றுக்காக கடுமையாக மோதி வருகின்றன.

லக்னோ மற்றும் நடப்பு சாம்பியனான கொல்கத்தா ஆகிய அணிகள் நூலிழையில் தங்களது பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளன. குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் முதல் மூன்று இடங்களில் ஆதிக்கம் செலுத்த, மும்பை மற்றும் டெல்லி அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 

அதன்படி, வரும் ஜுன் மாதம் 3ம் தேதி நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி நடைபெற உள்ளது. சென்னை, ஹைதராபாத் போன்ற இடங்களில் போட்டிகள் நடத்தப்படாமல் மொத்தம் ஆறு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய அட்டவணையில் எந்த ஒரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் இல்லை.மொத்தமே ஆறு மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள போட்டிகள் அனைத்தும் 6 மைதானங்களில் நடத்தப்பட உள்ளன. பிளே-ஆஃப் சுற்றானது மே 29ம் தேதி தொடங்க உள்ளது. அடுத்து வரப்போகும் இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தலா இரண்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

IPL 2025 UPDATED SCHEDULE..
IPL 2025 UPDATED SCHEDULE..

ஐபிஎல் 2025 – திருத்தப்பட்ட அட்டவணை:

மே.17 – இரவு 7.30 பெங்களூரு – கொல்கத்தா – இடம்:- சின்னசாமி மைதானம்

மே.18 – மாலை 3.30 ராஜஸ்தான் – பஞ்சாப் – இடம்:- சவாய் மான்சிங் மைதானம்

மே.18 – இரவு 7.30 டெல்லி – குஜராத் – இடம்:- அருண் ஜெட்லி மைதானம்

மே.19 – இரவு 7.30 லக்னோ- ஐதராபாத் – இடம்:- ஏக்னா கிரிக்கெட் மைதானம்

மே.20 – இரவு 7.30 சென்னை – ராஜஸ்தான் – இடம்:- அருண் ஜெட்லி

மே.21 – இரவு 7.30 மும்பை – டெல்லி – இடம்:- வான்கடே மைதானம்

மே.22 – இரவு 7.30 குஜராத் – லக்னோ – இடம்:- அகமதாபாத் மைதானம்

மே.23 – இரவு 7.30 பெங்களூரு – ஐதராபாத் – இடம்:- சின்னசாமி மைதானம்

மே.25 – மாலை 3.30 குஜராத் – சென்னை – இடம்:- அகமதாபாத் மைதானம்

மே.25 – இரவு 7.30 ஐதராபாத் – கொல்கத்தா – இடம்:- அருண் ஜெட்லி

மே.26 – இரவு 7.30 பஞ்சாப் – மும்பை – இடம்:- சவாய் மான்சிங் மைதானம்

மே.27 – இரவு 7.30 லக்னோ- பெங்களூரு – இடம்:- ஏக்னா கிரிக்கெட் மைதானம்

மே.29 – இரவு 7.30 குவாலிஃபயர் – 1

மே.30 – இரவு 7.30 எலிமினேட்டர்

ஜுன்.1 – இரவு 7.30 குவாலிஃபயர் – 1

ஜுன்.3 – இரவு 7.30 இறுதிப்போட்டி

IPL 2025 UPDATED SCHEDULE

More Details Click here

https://x.com/incricketteam/status/1921974155919974798

Related Articles

Back to top button